search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் கோர்ட்டு"

    நாமக்கல்லில் முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஆஷாத் (வயது 19). எலக்ட்ரீசியன். இவரது நண்பர் தீபக் (19). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கொண்டிசெட்டிப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த அன்புநகரை சேர்ந்த ஜீவானந்தம் (23), கணபதிநகர் வினோத் (20) ஆகிய இருவரும் தீபக்கை கத்தியால் குத்த முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்தை ஆஷாத்தை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ஆஷாத்துக்கு தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

    அவர் சத்தம் போடவே அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து ஆஷாத்தை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தீபக் என்பவருக்கும், ஜீவானந்தம், வினோத் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதும், அதன் காரணமாகவே இச்சம்பவம் நடந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்த ஜீவானந்தம், வினோத் ஆகிய இருவரும் நேற்று சேலம் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சேலத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர் ஆனார். #seeman

    சேலம்:

    நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சேலம் மணக்காட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

    இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சீமான் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக் கொண்டார்.

    பின்னர் சீமான் வெளியே வந்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான், பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக ஆட்சியாளர்கள் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. என்னை கோர்ட்டு, ஜெயில் என்று அலைக்கழித்தால் மக்கள் போராட வரமாட்டார்கள் என நினைக்கிறார்கள். மக்களுக்கு பிடிக்கவில்லை எனில் 8 வழிச்சாலைக்கு நாங்களே பூட்டுபோட்டு விடுகிறோம் என்று அமைச்சர் உதயகுமார் பேசுகிறார். முதல்-அமைச்சர் பேசும்போது இன்னும் 10 ஆண்டுகளில் வாகனங்கள் அதிகமாகிவிடும். 8 வழிச்சாலை போட்டால் விபத்துக்கள் குறைந்து விடும் என்கிறார். அமைச்சரும், முதல்-அமைச்சரும் பேச்சிலே முரண்பாடுகள் உள்ளது. ஆகவே மக்களுக்கு பிடிக்காத 8 வழிச்சாலையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். seeman

    ×